SHORT STORY
DOG VS MAN
The husband and wife lived in a town. The husband does not like to see his wife raising a puppy. The wife had more affection for the puppy. The puppy also behaves like a very good child to her. But, some time playing with this husband’s stuff will break it down. The husband could do nothing because the wife was fond of the dog.
Days passed like this.
One day the husband had no choice but to lift the dog and put it in his cart and leave it at a distance and return home. After a while the dog came home. The days went by like this when he took it and it came back home.
One day the husband made a decision and went all the way into a long-distance alley and dropped it off after a two-hour drive. After that he struggled for three hours to return home and did not know the way.
Angered, he contacts his wife's cell phone and asks if there is a dog in the house. His wife told him that "Rocky" was at home.
The husband said with smile, "I have to get used to living with the dog."
Thanks, see you in the next story.
Share if you like.
ஒரு ஊரில் கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர். அந்த கணவனுக்கு மனைவி வளர்க்கும் ஒரு நாய்க்குட்டியை கண்டால் பிடிக்காது. மனைவியோ அந்த நாய்குட்டியின் மீது அதிக நேசம் வைத்திருந்தாள். நாய்குட்டியும் அவளிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும். ஆனால் , இந்த கணவனின் பொருள்களை எடுத்து சென்று விளையாடும் சில நேரம் அதை உடைத்து விடும். மனைவி அந்த நாயின் மீது பிரியமாக இருப்பதால் கணவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இப்பிடியே நாட்கள் கடந்தது.
ஒரு நாள் கணவன் வேரு வழியில்லாமல் அந்த நாயை தூக்கி தன் வண்டியில் வைத்துக்கொண்டு தூரமாக விட்டுவிட்டு வீடு திரும்பினார். கொஞ்ச நேரத்தில் நாய் வீட்டுக்கு வந்து விட்டது. அவர் கொண்டு போயி விடுவதும் இது திருப்பி வீடு வந்து சேருவதுமாக இப்படியே நாட்கள் சென்றது.
ஒரு நாள் அந்த கணவன் ஒரு முடிவு செய்து பல தூரம் சந்து பொந்துக்குள் எல்லாம் சென்று இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அதை இறக்கி விட்டுவிட்டான். அதன் பிறகு வீடு திரும்ப மூன்று மணி நேரமாக போராடுகிறான் வழி தெரியவில்லை.
கோபம் கலந்த வருத்தத்துடன் மனைவியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு வீட்டில் நாய் இருக்கிறதா என்று கேட்கிறான். அதற்கு மனைவி , ஆமாங்க "ராக்கி" வீட்டில் தான் இருக்கிறான் என்று கூறினாள்.
அந்த கணவன் சிரித்து விட்டு "இனி நாயுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் "என சொல்லிக் கொண்டான்.
நன்றி, அடுத்த கதையில் சந்திப்போம்.
பிடித்தால் பகிரவும்.
Comments
Post a Comment